தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று புதன்கிழமை (08) ஆரம்பமாகவுள்ளது.
மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இடம்பெற்ற மூன்று வினாக்கள் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், அதற்கான இலவச புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும் 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் தோற்றியிருந்தனர்.