கண் சத்திரசிகிச்சை விவகாரம் – பார்வையிழந்தோருக்கு இழப்பீடு – அமைச்சரவையிலும் அனுமதி

கண் சத்திரசிகிச்சை விவகாரம் – பார்வையிழந்தோருக்கு இழப்பீடு – அமைச்சரவையிலும் அனுமதி

கண் சத்திரசிகிச்சை காரணமாக பார்வையற்றோருக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்களின் குருட்டுத்தன்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக  நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், 17 ஊனமுற்ற நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்களின் கண்கள் பார்வையற்று போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் முற்றிலும் பார்வையற்றவர்களாக மாறினர். இவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டது.

இதுபோன்ற இழப்பீடு வழங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. எனவே, நாங்கள் இப்போது இழப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறோம். அது மாத்திரமன்றி, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எனவே, இது குறித்து ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share This