2025 ஒஸ்கார் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தகுதி பெற்ற கங்குவா திரைப்படம்
இன்னும் இரண்டு மாதங்களில் 97 ஆவது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடத்துக்கான ஒஸ்கர் விருது பெறும் போட்டியில் தகுதி பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தகுதி பெற்றுள்ள 323 திரைப்படங்களில் 207 திரைப்படங்கள் சிறந்த திரைப்பட பிரிவில் இடம்பெற தகுதி பெற்றுள்ளன. அதில் கங்குவா, ஆடு ஜீவிதம், சந்தோஷ், ஸ்வாதந்த்ரியா வீர் சாவர்கர், ஆல் வி இமாஜின் அஸ் லைட் போன்ற ஐந்த இந்திய திரைப்படங்களும் அடங்கும்.
இத் திரைப்படங்களை தெரிவு செய்வதற்கான வாக்குப் பதிவுகள் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் நடைபெற்று 17 ஆம் திதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.