நெல்லை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்!

நெல்லை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்!

அரசாங்கத்திற்கு தேவையான நெல் கையிருப்பை பேணும் நோக்கில் ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் தொடக்கம் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அறுவடை செய்யவுள்ள பெரும்போகத்தில் மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை கூறியுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லானது, அரவாங்கத்தின் கையிருப்பாக வைக்கப்படும் எனவும், சந்தையில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவை விடுவிக்கப்படும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )