உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை 747 பேர் கைது – விசாரணைகள் தீவிரம் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை 747 பேர் கைது – விசாரணைகள் தீவிரம் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் பிரகாரம் இதுவரை 747 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி. அஜித் கிஹான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து அவர் பதில் அளிக்கையில்,

கைதுசெய்யப்பட்ட 747  சந்தேகநபர்களில் 100 சந்தேகநபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 14 வழக்குகள் தொடரப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் – 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட விவரங்கள் மற்றும் மேலதிக விவரங்களின் பிரகாரம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.  இவற்றில் வெளிப்படும் தகவல்களின் பிரகாரம் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறும்.

புதிய அரசாங்கத்தின் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளும் புதிய கோணத்தில் ஆரம்பமாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி விசாரணைகள் தொடர்பிலான தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.

12 சிவில் சாட்சியாளர்கள், 7 இராணுவ உறுப்பினர்கள், 26 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் 3 பேர் அடங்களால் 48 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. உரிய விதிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.” என்றார்.

Share This