அரசியல்வாதிகளின் தவறான செயற்பாடுகளை மூடி மறைக்க எங்களுக்கு மாஃபியா பட்டம்!

அரசியல்வாதிகளின் தவறான செயற்பாடுகளை மூடி மறைக்க எங்களுக்கு மாஃபியா பட்டம்!

திறமையற்ற அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் தவறான செயற்பாடுகளை மூடி மறைக்க தன்னைப் போன்று சுய முயற்சியில் முன்வந்தவர்கள் அன்றிலிருந்து பல கதைகளை கேட்டுள்ளதாக அரலிய அரிசி ஆலையின் உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்தார்.

தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை முன்வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பதிவில்,

“அன்றிலிருந்து திறமையற்ற அரசியல்வாதிகளின் மற்றும் அரச அதிகாரிகளின் தவறுகளை மறைக்க எங்களைப் போன்று சுய முயற்சியில் முன்வந்தவர்கள் பல கதைகளை கேட்டுக்கொண்டார்கள் .

உலகிலேயே பெரிய அரிசி சேமித்து வைக்கும் வசதி கொண்ட அரிசி ஆலை நாட்டிற்கு கொடுத்தும், ‘மாஃபியா’ என்ற முத்திரையை ஒட்டி நாட்டிற்காக உழைத்த திருப்தியை நான் இன்னும் அனுபவித்து வருகிறேன்.

ஆனால், இன்று போல் நாளையும் நாட்டிற்காக உழைப்பேன். நாட்டுக்காக முதலீடு செய்வேன். ஏனெனில், நானும் எனது மகன் திமித்ர உள்ளடங்கிய குழுவினருக்கு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆசை இன்னும் இருக்கிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share This