வீட்டில் பணமே தங்கலையே….இதையெல்லாம் செய்யாதீங்க!
அனைவருக்குமே பணம் மிகவும் முக்கியமானது. ஆனால், ஒரு சிலர் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கையில் தங்காது.
அதற்கு என்னதான் காரணம் என்று ஆராய்ந்தால் நாம் வீட்டில் தெரியாமல் செய்யும் சில காரியங்களினால் கூட பணம் வீண் விரயமாகும். எனவே எந்தெந்த விடயங்களை நாம் செய்யக்கூடாது எனப் பார்ப்போம்.
- சூரியன் மறைந்த பிறகு அதாவது, மாலை ஆறு மணிக்குப் பிறகு வீட்டைச் சுத்தம் செய்யக் கூடாது. இது துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
- வீட்டில் தூசிகள், ஒட்டடைகள் போன்றவற்றைக் கண்டால் உடனே சுத்தம் செய்துவிட வேண்டும். காரணம் அடிக்கடி வீட்டுக்குள் விஷ ஜந்துகள் வந்தார் அது செல்வ வளத்தைக் குறைக்கும்.
- பூஜையறையையும் பூஜைப் பொருட்களையும் அழுக்குபடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தளவுக்கு பூஜை அறை சுத்தமாக இருக்கிறதோ அதேயளவுக்கு வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்கும். தெய்வ சக்தி நிறைந்தால் வீட்டில் பணக் கஷ்டம் இருக்காது.
- சாப்பிட்ட பாத்திரங்களை நீண்ட நேரத்துக்கு கழுவாமல் அப்படியே வைத்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் பணக் கஷ்டம் ஏற்படும்.
- அழுக்கு துணிகளை அதிகம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- தலைமுடியை வீட்டுக்குள் சீவி அப்படியே போட்டுவிடக்கூடாது.
- உடைந்த பொருட்களை வீட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது.
- வீட்டில் வைத்திருக்கும் துளசிச் செடி கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.