இரத்தினக்கல் கண்காட்சிக்கு சென்றார் எதிர்க்கட்சி தலைவர்

இரத்தினக்கல் கண்காட்சிக்கு சென்றார் எதிர்க்கட்சி தலைவர்

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்று வரும் FACEST Sri Lanka 2025 சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) சென்றிருந்தார்.

அங்கு கண்காட்சியில் உள்ள மாணிக்கக் கற்கள் மற்றும் நகைச் சாவடிகளை அவதானிக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டு அது பற்றிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

“தேசிய மற்றும் வெளிநாட்டுக் தொழில் முறைக் கலைஞர்களின் பல்வேறு வகையிலான வடிவமைப்புகளை இங்கு காண முடிந்தது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த தேசிய வடிவமைப்பாளர்களுக்கு வெளிநாட்டு சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் மிகவும் முக்கியமானவை என நான் கருதுகின்றேன்’ எனவும் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

இக்கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணிக்கக்கல் மற்றும் ஆபரண வடிவமைப்பாளர்கள் பலர் இதில் பங்குபற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This