மிதுனத்தில் வக்ர நிவர்த்தியடையும் செவ்வாய்…இந்த ராசியினருக்கு செம்ம லக்
கிரகங்களின் தளபதியான செவ்வாய், ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரையில் தங்கியிருப்பார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார் செவ்வாய்.
அதன்படி, இம் மாதம் 21 ஆம் திகதி வக்ர நிலையிலேயே மீன ராசிக்குச் செல்லவுள்ளார்.
அதன் பின்னர் அடுத்த மாதம் 21 ஆம் திகதி மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் என்னென்ன மாற்றங்கள் நிகழவுள்ளன எனப் பார்ப்போம்.
சிம்மம்
சிம்மத்தின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளதால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். அனைத்து துறையிலும் வெற்றி கிட்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளதால் திருமண வாழ்க்கை மகிழச்சியாக இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். கூட்டு தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளதால் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.