பொலரோ ரக கெப் வண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

பொலரோ ரக கெப் வண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

பண்டாரவளை நகரில் பொலரோ ரக கெப் வண்டியொன்று நேற்று (05) பிற்பகல் , 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை அத்வல்லபிட்டிய பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது மகன் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பண்டாரவளை சந்தைக்கு சென்று வீட்டு புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியோரத்தில் வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது இவ் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This