எரிபொருள் விலையில் எவரின் சட்டைப் பைக்கும் பணம் செல்வதாக நாம் கூறியிருக்கவில்லை
ஒரு லீற்றர் எரிபொருள் விலையில் 162 ரூபா முன்னாள் அமைச்சர் ஒருவரின் சட்டைப் பைக்கு சென்றதாக ஜனாதிபதியோ அல்லது தமது அரசாங்கத்தில் உள்ள எவரும் இதற்கு கூறவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
”ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 102 ரூபா வரி விதிக்கப்படுவதுடன், திறைசேரிக்கு கடனாக ஐம்பது ரூபா செலுத்தப்படுகிறது.
கடன் தொகையை சேர்த்து ஒரு லீற்றர் எரிபொருளின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுவதுடன், கடந்த விலை திருத்தமும் அவ்வாறே திருத்தியமைக்கப்பட்டது.” என்றார்.
அmத்துடன், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்குமெனவும் அவர் கூறியுள்ளார்.