பழுதடைந்த மகுல்பொகுண – கலிங்கவில வீதி இராணுவத்தினரால் புனரமைப்பு

பழுதடைந்த மகுல்பொகுண – கலிங்கவில வீதி இராணுவத்தினரால் புனரமைப்பு

2025 ஜனவரி 02 ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக பொலன்னறுவை மாவட்ட, வெலிகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து அப்பிரதேச மக்களின் வீடுகள் மற்றும் பயிர்கள் சேதத்திற்குள்ளாகின.

அத்துடன், மகுல்பொகுணயில் இருந்து கலிங்கவிலவை இணைக்கும் பிரதான வீதி பாரியளவில் சேதமடைந்திருந்தது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் கீழ் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் மண்மூட்டைகளை அடுக்கி வான் பகுதியினை மீளமைத்ததுடன், பிரதேச மக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்தையும் வழமைக்கு கொண்டுவந்தனர்.

Share This