மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை விழுந்ததில் இருவர் உயிரிழப்பு
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது மரக்கிளை விழுந்ததில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ஜனவரி 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 சிறைக்கைதிகள் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் இருந்த 55 கைதிகள் நேற்று (02) இரவு அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
மரக்கிளை விழுந்து ஏற்பட்ட சேதத்தினால் மாத்தறை சிறைச்சாலையில் போதிய இடவசதி இல்லாததால் இவ்வாறு கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.