அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் – கேள்வியெழுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் – கேள்வியெழுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பவுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எழுத்துமூலமான சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக அறிக்கை வெளியிட்டு, கடந்த 13ஆம் திகதி அசோக ரன்வல பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

எனினும், தற்போது இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவருடைய அந்த கல்வித்தகைமையை உறுதிப்படுத்தும் எந்தவொரு எழுத்துமூல ஆவணமும் முன்வைக்கப்படவில்லை.

ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகத்திலிருந்து “கலாநிதி” பட்டத்தை பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும், மொரட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்ட பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழையும் இதுவரையில் அவர் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This