பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது – கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் ; விஜித ஹேரத்
நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வீழ்ந்த இடத்தில் நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும். குடும்பமாக உழைக்கும் போது குடும்ப முன்னேற்றத்திற்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறுதான் நாட்டுக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
ஆனால், அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காகப் போன்று இவை நாட்டு நலனுக்காக எடுக்கப்பட வேண்டும். இதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.