விண்வெளியில் புத்தாண்டு கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் புத்தாண்டு கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் 05ஆம் திகதி விண்வெளிக்குச் சென்றார்.

விண்கலத்தில் ஏற்பட்ட சில கோளாறின் காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாமல் இருக்கும் அவர் எதிர்வரும் மார்ச் மாதம் பூமிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறிருக்க விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பூமிக்கு மேல் 400 கிலோமீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் இக் குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் நேரத்தில் 16 சூரிய உதயங்கள் மற்றும் அஸ்தமனங்களைக் காண்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This