
பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதது.
துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 68 ஓட்டங்களையும், டீன் ஃபாக்ஸ்கிராப்ட் 59 ஓட்டங்களையும், வில் யங் 30 ஓட்டங்களையும், நேதன் ஸ்மித் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஸ் அணி தரப்பில் தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஸ் அணி 48.3 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துப்பாட்டத்தில் அதிகபட்சமாக சைஃப் ஹசன் 57 ஓட்டங்களையும், தவுஹித் ஹிர்தோய் 55 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் பிளேயர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், நேதன் ஸ்மித் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
26 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் எதிர்வரும் 20-ம் திகதி நடைபெற உள்ளது.
