மண்ணெண்ணெய் விலை குறைப்பு

மண்ணெண்ணெய் விலை குறைப்பு

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

எனினும், ஏனைய எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Share This