எரிபொருள் விலையில் இன்று மாற்றம் இடம்பெறுமா?

எரிபொருள் விலையில் இன்று மாற்றம் இடம்பெறுமா?

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெற உள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் நடைபெறும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. என்பதால் இம்முறை விலைத் திருத்தத்தில் பாரிய மாற்றங்கள் எதுவும் இடம்பெறாதென அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This