2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி
2025ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2024.11.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அmநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.