அனுமதி மறுப்புக்குப் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான்… கைது செய்த பொலிஸார்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸாரின் அனுமதி கேட்டிருந்த நிலையில், நுங்கம்பாக்கம் பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
பொலிஸாரின் அனுமதி மறுப்புக்குப் பின்னரும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் பொலிஸார் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீமானை கைது செய்த பொலிஸார் அவரை அருகிலுள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸார் கைது செய்தபோது “ஜனநாயக ரீதியில் போராட வந்த தன்னை பொலிஸார் ஒடுக்குகின்றனர் என சீமான் குற்றம் சாட்டினர்.