நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்

நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்

நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

2026 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தி வருகின்றன.

சுப்பர் எட்டுச் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்தியா உறுதி செய்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த தொடரில் இந்திய அணி களத்தடுப்பில் தடுமாறி வருகின்றது.

இதனால், நடப்பு தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்திய முதலிடத்தில் உள்ளது

இதுவரை 13 பிடியெடுப்புகளை இந்திய அணி தவறவிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 11 பிடியெடுப்புகளை தவறவிட்டுள்ளது. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி 10 பிடியெடுப்புகளை தவறவிட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.

அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் தலா ஒன்பது பிடியெடுப்புகளை தவறவிட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )