ஊருக்குள் உள் நுழைந்த முதலை – மக்கள் பதற்றம்

ஊருக்குள் உள் நுழைந்த முதலை – மக்கள் பதற்றம்
மட்டக்களப்பு புளியந்தீவு பிரண்டைச் சேர்ந்த வாவி கரை வீதியில் சுமார் 16 அடி நீளமான ராட்சத முதலை பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வசிக்கும் பிரதேச வாவி கரையில் சுற்றி திரிந்த முதலை 29.12.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை புளியந்தீவு கிராமத்திற்குள் உள் நுழைய முற்பட்ட போது பொதுமக்களால் கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்டது.
இதனால் மீனவர்கள் தமது ஜீவநோபாயத்தை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சமீபத்தில் வெள்ள அனர்த்தம் வந்த போது ஊருக்குள் வந்து கால்நடைகளை பிடித்து சென்ற முதலை இதுவெனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Share This