மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மொனராகலையில் இன்று மக்கள் கலந்தாய்வு
ஊவா மாகாணத்தை மையமாக வைத்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கான மின்சார கட்டண திருத்த யோசனைக்கான பொது கலந்தாய்வு கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, மின்சார நுகர்வோர் உட்பட மின்சாரத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வசதியாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இதன்படி ஊவா மாகாணத்தை மையப்படுத்தி பொது மக்களின் கருத்துகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மக்கள் கருத்துபெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.