
தமிழகத்தில் தங்கம் விலை பவுனுக்கு 15200 ரூபா குறைந்தது
தமிழகத்தின் சென்னையில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 7600 ரூபா குறைவடைந்துள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 55 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை பவுனுக்கு காலையில் 4,800 ரூபா குறைந்தது, மாலையில் மேலும் ரூ.2,800 குறைந்து
ஒரே நாளில் பவுனுக்கு 7,600 ரூபா குறைந்து.
இதற்கமைய ஒரு பவுன் 1,26,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதி நாளான இன்று சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் 7600 ரூபா
சரிந்துள்ளது.
அதன்படி, இன்று கிராமுக்கு 950 ரூபா குறைந்து, ஒரு கிராம் 14,900 ரூபாவுக்கும், பவுனுக்கு 7,600 ரூபா குறைந்து ஒரு பவுன் 1,19.200 ரூபாவுக்கும் விற்பனையாகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்பாடுகளால் தென் கொரியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் டொலர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் டொலரை விற்பனை செய்து, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.
இந்நிலையில், இந்த வகை முதலீடுகள் குறைந்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு 15200 ரூபா குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
