
நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
பல்லேகலயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
மாலை 06.30 க்கு நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. எனவே போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவராக ஹரி புரூக் (Harry Brook) செயற்படுவதுடன், இலங்கை அணியைத் தசுன் ஷானக வழிநடத்துகின்றார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி ஒன்றுக்கு இரண்டு என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES விளையாட்டு
