வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு – அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை இலக்குவைக்கும் ஈரான்

வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு – அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை இலக்குவைக்கும் ஈரான்

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

இதனிடையே, ஈரானின் புரட்சிகரப் படைகளை ஐரோப்பிய ஒன்றியம் “பயங்கரவாத அமைப்பு” என கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்நிலையில், பிராந்தியத்தில் பெரும் நெருக்கடி ஏற்படாமல் இருக்க அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும்
என ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கட்டார் தலைவர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஆகியோர், பதற்றத்தை குறைத்து பிராந்திய ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் முயற்சிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கட்டார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )