
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
அதிகாரிகள் கூறினர்.
மேலும் அதன் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க திகதி வழங்குமாறும் கோரினர்.
இந்நிலையில் இவற்றை கருத்திற் கொண்டு, ஜூலை 10 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயித்த நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்க உத்தரவிட்டார்.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு
தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
