
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை மற்றும் விழா நடவடிக்கைகள் காரணமாக கொழும்பில் இன்று (30) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று (30), நாளை (31) மற்றும் பெப்ரவரி 02 ஆம் திகதிகளில் ஒத்திகை பயிற்சிகள் நடைபெறவுள்ளதுடன், அந்த நாட்களில் காலை 7.45 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
மேலும், பெப்ரவரி 01 ஆம் திகதி காலை 5.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 5.00 மணி முதல் சுதந்திர தின விழா நிறைவடையும் வரையிலும் தேவைக்கேற்ப போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
TAGS 78வது சுதந்திர தினம்
