
இலங்கையை உலுக்கியுள்ள நாமலில் ஒடிசா பயணம் – அரசாங்கத்துக்கு இந்தியா எச்சரிக்கை மணியா?
இலங்கை அரசியலில் இந்தியா எப்போதுமே ஒரு மையப்புள்ளியாகவே இருந்து வருகிறது.
தென்னிலங்கை அரசியலை புரட்டிபோடும் பல்வேறு அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் தேசியப் புலனாய்வு பிரிவான ‘ரோ’ கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது.
அத்தகையதொரு நகர்வை மீண்டும் புதுடில்லி எடுக்கும் ஆலோசனைகளை விரைவில் மேற்கொள்ளலாம் என புதுடில்லியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மிகப் பெரிய மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.
இந்தப் பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துடன், இணக்கமான போக்கையே இந்தியா விரும்புகிறது.
அதன் பிரகாரமே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட ஒருவருடத்துக்கு முன்பே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பையும் இந்திய அளித்தது.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டு முதல் இராஜதந்திர பயணத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார்.
இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றி 80களில் பேசிய ஜே.வி.பியும் அதன் தலைமைகளும் பூகோள அரசியல் போக்கை உணர்ந்துள்ளதன் காரணமாகவே இந்தியாவுடனான உறவை மீள புதுப்பித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான உறவு புதுபிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஓர் இணக்கப்பாட்டான சூழலுக்கு இன்னும் வரவில்லை என புதுடில்லி கருதுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டு ஒரு வருடத்தை கடந்துள்ள சூழலில் அந்தப் பயணத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் தீர்மானங்கள் எதுவும் இன்னமும் இலங்கையில் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக இருநாட்டுகளுக்கு இடையிலான கேபிள் குழாய் அமைப்பு, திகோணமலை எண்ணெய் குதங்கள் விவகாரத்தில் விரைவான தீர்மானங்கள் எடுக்கப்படமை உட்பட பல்வேறு வாக்குறுதிகள் குறித்த நகர்வுகள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை என்பதால் இந்தியா இலங்கைமீது சற்று அதிருப்தியில் உள்ளது.
இணக்கப்பாட்டான சூழலை அரசாங்கத்துடன், விரும்புவதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே டித்வா புயல் ஏற்பட்ட தருணத்தில் பல்வேறு உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.
என்றாலும், இலங்கையில் நகர்வுகள் குறித்து ஓரளவு அதிருத்தியில் மோடி அரசாங்கம் இருப்பதால்தான் ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தினத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்டமான வரவேற்பை புதுடில்லி அளித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாமல் ராஜபக்சவுக்கான வரவேற்பை சமகால அரசாங்கம் ஓர் எச்சரிக்கை மணியாக எடுக்க வேண்டும் என்பதே நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பின் இராஜதந்திர செய்தியாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாமல் ராஜபக்சவுக்கு ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு குறித்து அரசாங்கம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
