
தங்கத்தின் விலை 4 இலட்சத்தைத் தாண்டியது
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய தரவுகளின்படி, தங்கத்தின் விலையில் 10,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் “22 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை 374,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்று 394,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை, இன்று 405,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
TAGS தங்கத்தின் விலை
