டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு காசோலையில் சர்ச்சை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு காசோலையில் சர்ச்சை

டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஒன்பதாம் திகதி அனுராதபுரத்தில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், ராஜாங்கனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக்கொள்வதற்காக காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிகளில் செல்லுபடியாகவில்லை (மறுக்கப்பட்டன) என ராஜாங்கனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ரஜரட்ட பொதுஜன விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகளும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து முறையிடுவதற்காக அவர்கள் ராஜாங்கனை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அந்தச் சமயத்தில் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இல்லாததால், அவர்கள் அங்கிருந்த நிர்வாக அதிகாரியுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்

காசோலைகளுக்கான நிதி வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது குறித்து விளக்கம் அளிப்பதற்காக ராஜாங்கனை பிரதேச செயலாளர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்ட இந்த தாமதம் குறித்து அவர் அங்கு விளக்கமளித்தார்.

இதற்கிடையில், ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க கல்நேவ பகுதிக்கு விஜயம் செய்தார்.

அங்குள்ள மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் மூலம் ஒதுக்கப்பட்ட பணத்தை தங்களால் வெற்றிகரமாகப் பெற்றுக்கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தனர்.

இதன் மூலம் ஒரு சில இடங்களில் மாத்திரமே நிர்வாகக் காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )