பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 06 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 06 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 06 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன், 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )