
80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து, சாரதியின் திறமையால் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல மஹா வாங்குவா பகுதியில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலவாகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர், பேருந்து ஒரு வளைவை எடுக்க முயன்றபோது, பிரேக்குகள் திடீரென செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பேருந்தை கட்டுப்பாட்டில் எடுக்க இரண்டாவது கியருக்கு மாற்றியதாக பேருந்தின் சாரதி தெரிவித்தார்.
இதன் போது கடும் மழை பெய்யும் பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, மண் மேட்டில் மோதி பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணம் செய்ததாகவும், பின்னர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அந்த பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
