சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் – வாக்கெடுப்பை மீளப் பெற்றது பிரித்தானிய அரசாங்கம்

சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் – வாக்கெடுப்பை மீளப் பெற்றது பிரித்தானிய அரசாங்கம்

சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது.

சாகோஸ் தீவுகளை மீள ஒப்டைக்கும் தீர்மானத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன. ஆளுங்கட்சிக்குள்ளும் இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், நாளைமறுதினம் இந்தத் தீர்மானம் மீது நடைபெறவிருந்த வாக்கெடுப்பை மீளப் பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நிழல் வெளியுறவு செயலாளர் பிரிதி படேல், இதனால் எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு இந்த விடயம் ஓர் அவமானகரமானது. சாகோஸ் தீவுகளை வழங்குவதற்கு எதிராக செயல்பட்ட அனைவருக்கும் இது ஒரு பாரிய வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாகோஸ் தீவுகளை மீள ஒப்படைக்கும் தீர்மானம் முட்டாள்தனமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்தவாரம் விமர்சனத்தை முன்வைத்திருந்துடன், இது அரசாங்கத்தின் முழு பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இந்தப் பின்புலத்திலேயே சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானத்தில் இருந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )