சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ அண்மித்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ அண்மித்தது

இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அன்றைய தினம் மாத்திரம் 10,483 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிருந்து வருகை தந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தந்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )