பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் திருமண கொண்டாட்டத்தின் தற்கொலை குண்டுத்தாக்குதல்

பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் திருமண கொண்டாட்டத்தின் தற்கொலை குண்டுத்தாக்குதல்

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைதிக் குழு உறுப்பினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்தின் போது நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

குரேஷி மோர் அருகே அமைதிக் குழுத் தலைவர் நூர் ஆலம் மெஹ்சுத்தின் வீட்டில் நேற்று நடந்த திருமண கொண்டாட்டத்தின் போது தற்கொலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடந்த போது விருந்தினர்கள் நடனமாடி கொண்டிருந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

மேலும், இந்த குண்டுவெடிப்பால் அறையின் கூரை இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்புலத்தில் தீவரவாத அமைப்புகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பக்துன்க்வா மாகாண காவல்துறை, இதகுறித்த தீவர விசாரணைகளை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )