
அரசமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமனம்
அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர்.
காலாவதியான வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கலந்துரையாட அரசமைப்புப் பேரவைக் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டதன் பிரகாரம் குறித்த வெற்றிடங்களுக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர்.
அதன்படி ஒஸ்ரின் பெர்னாண்டோ, ரஞ்சித் ஆரியரட்ன, பேராசிரியர் வசந்தா செனவிரட்ன ஆகியோர் சிவில் சமூகத்தின் சார்பில் புதிய உறுப்பினர்களாக அரசமைப்புப் பேரவைக்கு நியமனம் பெற்றுள்ளனர்.
TAGS அரசமைப்புப் பேரவை
