
மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய இரகசிய அறை : குருநாகலில் பரபரப்பான தகவலை வெளியிட்ட தேரர்
குருநாகல் நரில் அமைந்துள்ள பிரபலமான விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிசொகுசு அறையொன்றை பயன்படுத்தியதாக பௌத்த தேரர் ஒருவர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குறித்த அறையில் மகிந்த ராஜபக்ச இரவு தங்கியதில்லை எனவும், ஆனால் அவசரமாக வந்து பல மணிநேரம் இருப்பார் எனவும், அவர் வருவதற்கு முன்னர் விகாராதிபதிக்கு அறிவித்த பின்னர் நாங்கள் தான் சுத்தம் செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம்.
இங்கு அவர் வந்த பின்னர் விருந்து இடம்பெறுவதால் எங்களுக்கு இந்த பக்கம் வரமுடியாது.நாங்கள் எமது அறையில் இருந்து வெளியில் வரமாட்டோம்.அறையில் அதி சொகுசான கட்டில் மெத்தை போடப்பட்டுள்ளது.
குளிரூட்டியும் பொறுத்தப்பட்டுள்ளது.அறையின் உட்கட்டமைப்புகள் அதி சொகுசான விலையுயர்ந்து பொருட்களில் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அறையில் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியில் செல்லக் கூடிய சிறிய கதவும் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அறைக்கு வருவதற்கான நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் இரும்பு கேட்டை பூட்டினால் உள்ளே வாகனம் இருப்பது மற்றும் ஆட்கள் இருப்பது வெளியில் தெரியாது. மகிந்த இங்கு வந்து தான் தனது இரகசிய விடயங்களில் ஈடுபடுவதாகவும் பிக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் ஹசினி என்ற ஒரு பெண்ணும் வந்து தங்குவதாகவும், அங்கு குடியிருந்த கிராமத்து மக்களுக்கு இவ்வாறான ஒரு அறையிருப்பது தெரியாது எனவும் குறிப்பிடுகின்றனர்.
அத்தோடு 20 வருடங்களாக குறித்த விகாரைக்கு வந்து செல்வது யாருக்கும் தெரியாது என்றும், ஆனால் அங்கியிருக்கும் சிரேஷ்ட பிக்கு ஒருவர் இதை மறைப்பதற்காக பல கருத்துக்களை தெரிவித்து ஊடகவியலாளர்களை திசைதிருப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டதையும் அவானிக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விகாரையில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து கட்டடங்களையும் மகிந்த ராஜபக்சவே திறந்து வைத்ததாகவும் குறித்த பிக்கு தெரிவித்துள்ளார்.

