
சாமரவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு குற்றப் பத்திரிகை தாக்கல்
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (23) தெரிவித்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இவ்வாறு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு விசாரணையின் முடிவு அறிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
