
முக்கிய பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த சிறிவர்தன ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பதில் நிர்வாக இயக்குநர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் எதிர்கால பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கை திறைசேரியின் செயலாளராகப் பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன, தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பதில் நிர்வாக இயக்குநராக கடமையாற்றி வருகிறார்.
TAGS மஹிந்த சிறிவர்தன
