டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமைதி வாரியத்தில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுகிறது.

சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அந்த வாரியத்தில் இணையப் போவதில்லை என்ற முடிவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவு, ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )