
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, சர்வதேச அமைப்புகளின் பிரதானிகளுடனும் பேச்சு நடத்திவருகின்றார்.
இதன்ஓர் அங்கமாகவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,
” ஹட்ஜா லாபிப்பை ஜனவரி 21ஆம் திகதி டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இச்சந்திப்பின்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுகளுக்காக எனது நன்றியைத் தெரிவித்தேன்.
இலங்கையின் அனர்த்தத் தயார்நிலை மற்றும் மீட்சிச் செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன்.
