மனுஷ நாணயக்காரவின் சகோதரன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனுஷ நாணயக்காரவின் சகோதரன் மொனராகலை, பிபில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.