சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது.

‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் நோக்கிலேயே இந்த குழுவினர் விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இன்று நாட்டிற்கு வருகை தரும் குறித்த பிரதிநிதிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள்.

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை இலங்கை எவ்வாறு கையாண்டுள்ளது என்பதை ஆராய்வதும், உட்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்களை புரிந்துகொள்வதும் இக்குழுவின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )