
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 30,214 பேர் சோதனை
பொலிஸாரால் நேற்றை தினம்(20) நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரால் மொத்தம் 30,214 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவற்றில், குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 24 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 264 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 161 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விதி மீறல்களில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 397 சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,777 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
