வடகொரியாவால் அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்து: நேட்டோ தூதுவர் எச்சரிக்கை

வடகொரியாவால் அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்து: நேட்டோ தூதுவர் எச்சரிக்கை

வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான வலுவான கூட்டாண்மையானது எமது பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாகும் என்று நேட்டோவுக்கான அவுஸ்திரேலியாவின் இராணுவத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது,

“ உலகளாவிய மோதல்கள் ஒரு காலத்தில் புவியியல் ரீதியாக மிகவும் பிரிக்கப்பட்டிருந்தன அல்லது வரையறுக்கப்பட்டிருந்தன. எனினும், தற்போது மிகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அவுஸ்திரேலியா விழிப்புடன் இருக்க வேண்டும்.” – எனக் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வட கொரிய துருப்புக்களை அனுப்பியமை இதற்கு சான்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ வட கொரிய துருப்புக்கள் போர் அனுபவத்தைப் பெறுவதையும், மேற்கத்திய நாடுகள் வைத்திருக்கும் மற்றும் பயன்படுத்தி வரும் ஆயுத கட்டமைப்பு தொடர்பில் அவர்கள் அனுபவம் பெறுவதையும் காணமுடிகின்றது.

வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டாண்மை வலுப்படுத்தப்பட்டுவருகின்றது.

மேலும் இது எங்கள் பிராந்தியத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும். தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற பல விஷயங்களுக்கு வழிவகுக்கும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவகணைகளை வடகொரியா வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )