பிரதமர் மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம்

பிரதமர் மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம்

மது​ராந்​தகம் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்கப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் நாளை மறுதினம் நடை​பெறவுள்​ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்​திரமோடி உரை​யாற்​றவுள்​ளார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​களும் பங்​கேற்​க​வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்​கூட்​டத்​தில் மாலை 3 மணி முதல் 4.30 வரை பங்​கேற்​கும் பிரதமர் மாலை 4.30 க்கு ஹெலிகொப்​டரில் புறப்​பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் செல்வார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்பின்னர் மாலை 5.05 க்கு தனி விமானம் மூலம் அவர் டெல்​லிக்கு புறப்​படு​வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )