
நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் வரும்
” நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும், அதைவிடுத்து அரசாங்கம் இதனை தீர்மானிக்க வரக் கூடாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை முறையாகவும், சரியான நேரத்திலும் தேவையான கையொப்பங்களைப் பெற்றதன் பின்னர் நாம் சமர்ப்பிப்போம்.
முடிந்தால் மூன்று நாள் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தை நாளை முதலே நடத்துமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு நாம் சவால் விடுக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
டித்வா சூறாவளி மற்றும் அரசாங்கத்தின் செயற்திறன் இன்மை போலவே கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது தொடர்பான விவாத்த்திற்கும் எதிர்க்கட்சி தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
