இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தரவுகள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் சுமார் 64,425 ஆண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 24 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், கருப்பினத்தவர்கள் அல்லது குடும்பத்தில் இந்த நோயின் வரலாற்றைக் கொண்டவர்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்கள் இரத்தப் பரிசோதனையை கோர முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் அதிகாரப்பூர்வமாக மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது. தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டில் 58,137 ஆண்கள் இந்த நோயுடன் கண்டறியப்பட்டனர்.

தற்போது, ​​ஸ்காட்லாந்திலும் இந்த நோய் பொதுவான புற்றுநோயாகவும் மாறியுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் அங்கு 5,608 பேர் இந்த நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியான புரோஸ்டேட் புற்றுநோய் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயால் இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 12,000க்கும் மேற்பட்ட உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்த ஆறு முறை ஒலிம்பிக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியனான சர் கிறிஸ் ஹோயின் ஆதரவை தொண்டு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது.

சர் கிறிஸ் ஹோயினுக்கு 2023 ஆம் ஆண்டில் நான்காவது நிலை புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This